சந்திர காந்தக் கற்கள் பயன்கள் (MOON STONE BENEFITS)

சந்திர காந்தக் கற்கள் பயன்கள்: இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிபட்டைகள் (கல்லின் நடுவில்) அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது ( rot a te ) அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும். இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல் பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை, காப்பிகொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும் ( Transparent) இந்தக் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும், குளுமையாகவும், சந்திரனை போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லுநாரிஸ் (Lunaris) என்று அழைத்து மகிழ்ந்தார்கள். இதன் கனிமக் குறியீடு KAI SI3, O8 என்பதாகும். இதன் ஒப்படர்த்தி 2 .57ஆகும். இதன் கடினத்தன்மை 6. இதன் ஒளி விலகல் எண் 1.52- 1.53 ஆகும்....